வரலாற்றில் மூடிமறைக்கப்பட்ட கொலைகளில் இதுவே மிக மோசமானது! – ஜனாதிபதி ட்ரம்ப்
In அமொிக்கா October 24, 2018 3:04 am GMT 0 Comments 1739 by : Farwin Hanaa
சவுதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கியின் கொலை விவகாரத்தில் சவுதி அரேபியா அரசாங்கம், மிகவும் அப்பட்டமான உண்மைகளை மூடிமறைத்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், வரலாற்றில் மூடிமறைக்கப்பட்ட கொலைகளில் இதுவே மிகவும் மோசமானது என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஜமால் கஷோக்கியின் கொலை தொடர்பில் சம்பந்தப்பட்ட அனைவரும் பாரிய பிரச்சினைக்குள் சிக்கியுள்ளனர் என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதியின் அறிக்கையைத்தொடர்ந்து கருத்து தெரிவித்த இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ, ஜமால் கஷோக்கி கொலை விவகாரத்தில் அடையாளங்காணப்பட்ட 21 சந்தேகநபர்களின் விசாப்பத்திரங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
தங்களால் கொலை செய்யப்பட்ட ஜமால் கஷோக்கி, உயிரோடு இருப்பதாக பல நாட்களாக சவுதி அரசாங்கம் உறுதியாக தெரிவித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.