‘UWW கடற்கரை மல்யுத்த உலக சம்பியன்ஷிப் தொடர்’
In விளையாட்டு October 9, 2018 7:52 am GMT 0 Comments 1360 by : Anojkiyan
பலம் பொருந்திய வீரர், வீராங்கனைகளை இனங்கானும் ஓர் முயற்சியாக துருக்கியில் மல்யுத்த போட்டியொன்று நடத்தப்பட்டுள்ளது.
‘UWW கடற்கரை மல்யுத்த உலக சம்பியன்ஷிப் தொடர்’ என பெயரிடப்பட்ட இத்தொடர், துருக்கியின் சரிஜெர்மில் அமைந்துள்ள கடற்கரையில் நடைபெற்றது.
இந்த தொடரில் ஜோர்ஜிய, பாகிஸ்தான். ரோமேனியா, உள்ளிட்ட 17 நாடுகளை சேர்ந்த 150 இற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
இதில் ஆண்களுக்கு நான்கு, பெண்களுக்கு நான்கு என மொத்தம் எட்டு சம்பியன்ஷிப் பட்டங்களுக்கான போட்டிகள் நடைபெற்றன.
இதற்கமைய, 70கிலோ கிராம், 80கிலோ கிராம், 90கிலோ கிராம் மற்றும் 90கிலோ கிராமிற்கு மேற்பட்ட எடை பிரிவு என நான்கு பிரிவுகளில் ஆண்களுக்கு போட்டிகள் நடைபெற்றன.
பெண்களுக்கு 50கிலோ கிராம், 60கிலோ கிராம், 70கிலோ கிராம் மற்றும் 70கிலோ கிராமிற்கு மேற்பட்ட எடை பிரிவு என நான்கு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன.
இரசிகர்களின் உற்சாக கரகோஷத்திற்கு மத்தியில் நடைபெற்ற இப்போட்டித் தொடரில், ஆண்களுக்கான 70கிலோ கிராம் எடை பிரிவில், ஜோர்ஜியாவை சேர்ந்த கோன்ஸ்டன்டின் கபலாஷ்விலி சம்பியன் பட்டம் வென்றார்.
நடப்பு சம்பியனான சீமென் ரதுலவ்வை வீழ்த்தியே கோன்ஸ்டன்டின் கபலாஷ்விலி, சம்பியன் பட்டம் வென்றார்.
80கிலோ கிராம் எடை பிரிவில் ஜேர்ஜியாவின் ஜெகோப் மகராஷ்விலி சம்பியன் பட்டம் வென்றார்.
90கிலோ கிராம் எடை பிரிவில் பாகிஸ்தானின் மொஹமட் இமான், சம்பியன் பட்டம் வென்றார்.
90கிலோ கிராமிற்கு மேற்பட்ட எடை பிரிவில், துருக்கியின் பாகி சகின் சம்பியன் பட்டம் வென்றார்.
இதேபோல பெண்களுக்கான நான்கு பிரிவிலுமே ஜேர்ஜியாவை சேர்ந்த வீராங்கனைகளே சம்பியன் பட்டம் வென்றனர்.
பெண்களுக்கான 50கிலோ கிராம் எடை பிரிவில், ஜேர்ஜியாவின் ஸ்டீபானியா க்ளூடியா, உள்ளூர் சம்பியனான செவில் அலியோக்லியை வீழ்த்தி சம்பியன் பட்டம் வென்றார்.
பெண்களுக்கான 60கிலோ கிராம் எடை பிரிவில், உலக சம்பியனான இத்தாலியின் பிரான்செஸ்கா இன்டெலிகாடோவை வீழ்த்தி மற்றொரு ஜேர்ஜிய வீராங்கனையான கிறிஸ்ஸட்டா டன்டே இன்ஸ் சம்பியன் பட்டம் வென்றார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.