WTA டென்னிஸ் சம்பியன்ஷிப் தொடர்: ஒசாகா – ஸ்டீபன்ஸ் பலப்பரிட்சை!
In டெனிஸ் October 21, 2018 5:00 am GMT 0 Comments 1357 by : ஜெயச்சந்திரன் விதுஷன்

WTA டென்னிஸ் சம்பியன்ஷிப் தொடரில் ஸ்லோன் ஸ்டீபன்மற்றும் நியோமி ஒசாகா ஆகியோர் முதல் சுற்றில் பலப்பரிட்சை நடத்தவுள்ளனர்.
ஆண்டின் இறுதியில், தரவரிசையில் முதல் 8 வீராங்கனைகள் மட்டுமே பங்கேற்கும் பெண்கள் டென்னிஸ் சம்பியன்ஷிப் தொடர் நடத்தப்படுவது வழக்கம்.
அந்தவகையில் 8 ஆவது பெண்கள் டென்னிஸ் சம்பியன்ஷிப் தொடர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் 28 ஆம் திகதி வரை சிங்கப்பூரில் நடக்கிறது.
2017 ஆம் ஆண்டு யு.எஸ். ஓபன் பட்டம் வென்ற 25 வயதான அமெரிக்க வீராங்கனை ஸ்லோன் ஸ்டீபன்ஸ், 21 வயதான ஒசாகாவிற்கு எதிராக இந்த போட்டியுடன் இரண்டாவது முறையாக மோதுகின்றார்.
இதற்க்கு முன்னர் 2016 அகாபுல்கோ காலிறுதி போட்டியில் ஸ்லோன் ஸ்டீபன்ஸ் நேர் செட்கணக்கில் வெற்றி பெற்றிருந்தார்.
இந்நிலையில் நாளை (திங்கட்கிழமை) இடம்பெறவுள்ள முதலாவது சுற்று போட்டியில் இவர்கள் இருவரும் பலப்பரிட்சை நடத்தவுள்ளனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.