ஃபானி புயல்: உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு
In இந்தியா May 5, 2019 8:10 am GMT 0 Comments 2468 by : Yuganthini

ஒடிசாவில் ஏற்பட்ட ஃபானி புயலில் சிக்கி இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
ஃபானி புயலினால் மயூர்பஞ்ச், புரி, பூபனேஸ்வர், ஜஜ்பூர், கியோஞ்சர், நயாகர் மற்றும் கேந்திராபரா ஆகிய பகுதிகளில் உள்ளவர்களே உயிரிழந்துள்ளனர்.
குறித்த புயலினால் 1 கோடி மக்கள் பாதிப்படைந்துள்ளதாகவும் 10000க்கும் மேற்பட்ட கிராமங்கள் மற்றும் 52 நகர்ப்புறங்களில் மீட்பு பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் மாநில அரசு குறிப்பிட்டுள்ளது.
வங்கக் கடலில் உருவான இந்த ஃபானி புயல், கடந்த வெள்ளிக்கிழமை காலை முதல் ஒடிசா மாநிலத்தில் கரையைக் கடக்கத் தொடங்கியது. இதன்போது ஏற்பட்ட சூறாவளிக் காற்றினால் செல்போன் கோபுரங்கள், மரங்கள், மின்கம்பங்கள் ஆகியன சாய்ந்து விழுந்துள்ளன.
குறித்த அனர்த்தங்களில் சிக்கியே 16 பேரும் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
வடக்கு மாகாணத்தில் இன்று மட்டும் 32 பெருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியச
-
மன்னாரில் முதலாவது கொரோனா தொற்றாளரின் மரணம் இன்று பதிவாகியுள்ளதாக மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள்
-
யாழ்ப்பாணம் மாநகர பொதுச் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கு கொரோ
-
சென்னையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தை எதிர்வரும் 27 ஆம் திகதி திறந்து வைக்க நடவடி
-
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடையும் நிலையில் புதிய ஜனாதிபதியாக தேர
-
நாட்டில் மேலும் 337 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு
-
முல்லைத்தீவு – குருந்தூர் மலையில் புத்தர் சிலை வைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக தமிழ்த் தேசியக் க
-
ரஷ்யாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றிலிருந்து 30இலட்சத்திற்கும் மேற்பட்டோர் மீண்டுள்ளனர்.
-
அர்ஜென்டினாவில் 6.4 ரிக்டர் அளவில், நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவி
-
சிறைகளில் உள்ள அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு வடக்கு மாகாணத்தில் உள்ள சர்வ மதத் தலைவர