ஃபானி புயல்: ஒடிசாவில் மூவர் உயிரிழப்பு
In இந்தியா May 3, 2019 11:20 am GMT 0 Comments 2499 by : Yuganthini

ஒடிசாவில் ஃபானி புயல் தாக்குதலில் மூவர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒடிசா மாநிலத்தில் ஃபானி புயல் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 8.30 மணிக்கு கரையை கடக்க தொடங்கியது.
இதையடுத்து, ஒடிசாவின் புரி, கோபால்பூர் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது
இந்நிலையில், ஒடிசாவில் மணிக்கு 240 கிலோ மீற்றருக்கு மேல் பலத்த காற்று வீசிய நிலையில் ஃபானி புயல் இன்று கரையை கடந்தது. இது மேற்கு வங்காளத்தை நோக்கி செல்கிறதென இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் குறித்த ஃபானி புயலால் மூவர் இதுவரை உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புரி மாவட்டத்தின் ஷகிகோபால் பொலிஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மரமொன்று வேரோடு சாய்ந்ததில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார்.
அதேபோன்று நயகர் மாவட்டத்தில் கட்டுமான பணிகள் நடைபெற்றுவந்த வீட்டிலிருந்து பறந்துவந்த கற்கள் தாக்கியதில் அவ்வழியாக தண்ணீர் பிடிக்க சென்ற பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
மேலும் கேந்திரபாரா மாவட்டத்தில் புயல் நிவாரண முகாமில் தங்கியிருந்த சுமார் 65 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணி மாரடைப்பால் உயிரிழந்தார்.
இதேவேளை ஃபானி புயலால் ஏற்படும் பாதிப்புக்களை தவிர்த்துகொள்வதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 10 இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் பாதுகாப்பாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.