அஜித் டோவலுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் விசேட பேச்சுவார்த்தை
In இலங்கை November 29, 2020 3:07 am GMT 0 Comments 2424 by : Yuganthini
இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவலுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இடையில் பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றுள்ளது.
நேற்று (சனிக்கிழமை) மாலை, ஜனாதிபதி செயலகத்திலேயே இருவருக்கும் இடையில் குறித்த பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது.
இதன்போது, இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துதல், பாதுகாப்பு ஒத்துழைப்பு, இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் அமைதி மற்றும் பாதுகாப்பைப் பேணுதல், இலங்கையில் உட்கட்டமைப்பு மேம்பாடு ஆகிய விடயங்கள் தொடர்பில் இருவரும் ஆலோசனை நடத்தியுள்ளனர்.
மேலும், இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கும் புதிய பகுதிகளை அடையாளம் கண்டு முதலீடு செய்ய இந்தியாவின் விருப்பம் கொண்டுள்ளதாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, திருப்திகரமான இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதியும் இந்திய பாதுகாப்பு ஆலோசகருக்கு தெளிவுப்படுத்தியுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.