அண்டை நாடுகள் மூலம் அச்சுறுத்தல்: இராணுவத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்கும் ஜப்பான்!

அண்டை நாடுகள் மூலம் அச்சுறுத்தல் எழுந்துள்ளதையடுத்து அதனை எதிர்கொள்ள இராணுவத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்க ஜப்பான் அமைச்சரவை ஒப்புதல் தெரிவித்துள்ளது.
சீனா, தென் கொரியா உள்ளிட்ட நாடுகளிடமிருந்து ஜப்பானின் பாதுகாப்புக்கும், இறையாண்மைக்கும் அச்சுறுத்தல்கள் எழுந்துள்ளன.
இதனை எதிர்கொள்ள வேண்டுமெனில் இராணுவத்தை பலப்படுத்த வேண்டியது அவசியத் தேவையாகி உள்ளது.
நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளை மேம்படுத்தவும், போர் விமானங்களை வாங்கவும், வீரர்களின் எண்ணிக்கையை அதிகரித்து படை பலத்தை விரிவாக்கவும் அதிக நிதி தேவைப்படுகிறது.
தற்போது இந்த கூடுதல் நிதியினை ஒதுக்கீடு செய்ய ஜப்பான் அமைச்சரவை தனது ஒப்புதலை தெரிவித்துள்ளது. தொடர்ச்சியாக
இராணுவத்துக்கான ஒதுக்கீடு அதிகரிக்கப்படுவது இது ஒன்பதாவது முறையாகும்.
இதையடுத்து, 2021-நிதியாண்டுக்கான வரவுசெலவு திட்டத்தில் இராணுவத்துக்காக இதுவரை இல்லாத வரலாற்று உச்சமாக 5,170 கோடி டொலர்களை ஒதுக்கீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது என பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.