அதிகரிக்கும் கொரோனா தொற்று – மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அறிவிப்பு
In இலங்கை December 1, 2020 4:32 am GMT 0 Comments 1702 by : Dhackshala

நாட்டின் தற்போதைய நிலைமைக்கு மத்தியில் வைபவங்களை ஏற்பாடு செய்வதை தவிர்த்துக்கொள்ளுமாறு சுகாதார மேம்பாட்டு அலுவலகத்தின் பணிப்பாளர் விசேட வைத்தியர் பாலித்த கருணாபேம பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இது தொடர்பாக தெரிவித்துள்ளார்.
பண்டிகைக் காலப்பகுதியில் கடைகளுக்கு செல்வதை அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரம் வரையறுக்குமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வர்த்தக நிலையங்களுக்கு வீட்டில் இருந்து ஒருவர் மாத்திரம் செல்வது பொருத்தமானதாகும் என்றும் இதுதொடர்பில் வீட்டில் உள்ள அனைவரும் தற்போதைய நிலைமையை உணர்ந்து செயற்பட வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் பொது மக்கள் பொறுப்புடன் செயற்படுவதன் மூலம் வைரஸ் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.