அதிகாரிகளுக்கு கட்டளை வழங்கிய கோட்டாபயவே பொறுப்பு கூற வேண்டும்: ஸ்கொட் கில்மோர்
In இலங்கை April 16, 2019 6:40 am GMT 0 Comments 2611 by : Yuganthini

இலங்கை பாதுகாப்பு அதிகாரிகளுக்கு கட்டளை வழங்கியவர் என்ற ரீதியில் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவே முழுமையாக பொறுப்புக்கூற வேண்டியவரென அனைத்துலக சட்ட நிபுணர் ஸ்கொட் கில்மோர் தெரிவித்துள்ளார்.
கலிபோர்னியா மத்திய மாவட்ட நீதிமன்றத்தில் கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக கனடாவைச் சேர்ந்த றோய் சமாதானம் என்பவர், மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.
அதில், நான் கொழும்பில் தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டேன்.
அத்துடன் தடுத்து வைக்கப்பட்டிருந்த இடத்தை கோட்டாபய ராஜபக்ச அறிந்திருந்ததுடன் அவர்களுடனும் தொலைபேசியில் உரையாடியதை கேட்டிருக்கின்றேன்.
அந்தவகையில் தன்னை தடுத்து வைத்து சித்திரவதைக்கு உட்படுத்தியமைக்கு இலங்கை அரசு அதற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என றோய் சமாதானம் குறித்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சிவில் வழக்கை சட்ட நிபுணர் ஸ்கொட் கில்மோர் கையாளவுள்ள நிலையிலேயே, கோட்டாபய அனைத்துலக சட்டங்களுக்கு அமைய குறித்த விவகாரத்தில் பொறுப்புக் கூற வேண்டியவரென அவர் கூறியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ், நாடாளுமன்றம் மற்றும் ஜனாதிபதித் தேர்தல்களை அறிவித்துள்ளார். அந்நாட
-
ஸ்புட்னிக் கொரோனா தடுப்பு மருந்தின் மூன்றாம் கட்டச் சோதனையை இந்தியாவில் மேற்கொள்ளத் தலைமை மருந்துக்
-
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதலாம் திகதியில் இருந்து இதுவரை 12 ஆயிரத்து 329 கைதிகள் விடுவிக்கப்பட்டு
-
ஒன்றாரியோவில் இரண்டாம் கட்டம் முடிவதற்குள், 8.5 மில்லியன் மக்களுக்கு நோய்த்தடுப்பு மருந்துகளை வழங்க
-
பிரித்தானியாவுக்கு வரும் அனைவரும் சுயமாக தனிமைப்படுத்த வேண்டும்: திங்கள் முதல் புதிய கட்டுப்பாடுகள்!
உருமாறிய கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலால் பாதிப்பு அதிகரித்துவருவதால், பிரித்தானியாவுக்கு வரும் அனைவரும
-
நெதர்லாந்தில் ஃபைஸர்- பயோன்டெக் தடுப்பூசி செலுத்திக் கொண்ட நூற்றுக்கணக்கானோருக்கு பல்வேறு பக்க விளைவ
-
இந்தியா மற்றும் அவுஸ்ரேலியா அணிகளுக்கிடையிலான நான்காவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியின், இரண்டாம்நாள்
-
ஓமான் நாட்டுக்கு தொழில் நிமித்தமாக சென்ற 283 இலங்கையர்கள் இன்று (சனிக்கிழமை) காலை 8.30 மணியளவில் கட்
-
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாராவின் வேடத்திற்கு பிரபல ஹிந்தி நடிகை மாறியுள்ளார
-
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தை நடிகர் விஜய், ரசிகர்களுடன் சேர்ந்து படத்தை ப