அதிக ஆபத்துள்ள நாடுகளில் இருந்து வரும் பயணிகளை தனிமைப்படுத்த பிரிட்டன் திட்டம்
In இங்கிலாந்து January 24, 2021 3:23 am GMT 0 Comments 1937 by : Jeyachandran Vithushan

கொரோனா தொற்றினால் அதிக ஆபத்து உள்ள நாடுகளில் இருந்து நாட்டுக்கு வரும் பயணிகளை 10 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தலை விதிக்க பிரித்தானிய அரசு தயாராகி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் பிரேசில் மற்றும் தென்னாபிரிக்கா மற்றும் அண்டை நாடுகளைச் சேர்ந்த பயணிகள் வருகையின் பின்னர் சுய தனிமைப்படுத்த ஹோட்டல்களுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என கூறப்படுகின்றது.
குறித்த திட்டம் குறித்து அமைச்சர்கள் விவாதித்துள்ளதாக அந்நாட்டு செய்தி நிறுவனமான டெய்லி மெயில் செய்தி வெளியிட்டுள்ளது.
அனைத்து பயணிகளையும் தனிமைப்படுத்துவதற்கு பதிலாக குறித்த திட்டத்தை நடைமுறைப்படுத்த பிரதமர் பொரிஸ் ஜோன்சன் முடிவு செய்துள்ளதாகவும், இந்த திட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் அமுல்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.