அதிநவீன போர் விமானங்களை விற்பனை செய்ய அமெரிக்கா தீர்மானம்!
In இந்தியா January 29, 2021 6:04 am GMT 0 Comments 1490 by : Krushnamoorthy Dushanthini

இந்தியாவுக்கு அதிநவீன போர் விமானங்களை விற்பனை செய்ய போயிங் நிறுவனத்துக்கு அமெரிக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்திய விமானப் படையில் இருக்கும் பழைய போர் விமானங்களை பயன்பாட்டில் இருந்து நீக்கிவிட்டு புதிய ரக போர் விமானங்களை கொள்வனவு செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதன்படி போயிங் தயாரித்துள்ள ‘எப்-15 எக்ஸ்’ என்ற அதிநவீன போர் விமானத்தை கொள்வனவு செய்ய இந்திய விமானப்படை விண்ணப்பித்திருந்தது.
இந்நிலையில் இந்த போர் விமானங்களை இந்தியாவுக்கு விற்க போயிங் நிறுவனத்துக்கு அமெரிக்க அரசு அனுமதி அளித்துள்ளது. இதனை போயிங் நிறுவன உயரதிகாரி அங்குர் கனக்லேகர் உறுதிபடுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ள அவர், ‘இந்தியாவுடன் இதுகுறித்து ஏற்கனவே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. அமெரிக்க அரசு ஒப்புதல் அளித்ததையடுத்து இனி நேரடியாகவே பேச முடியும்.
அடுத்த வாரம் பெங்களூருவில் நடைபெறும் விமான கண்காட்சியில் இதுகுறித்து கூடுதல் ஆலோசனை நடத்தப்படலாம். நவீன தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்ட ‘எப்-15 எக்ஸ்’ போர் விமானங்கள், அனைத்து வானிலைகளிலும் இரவு, பகல் என எல்லா நேரங்களிலும் சிறப்பாக செயல்பட கூடியவை. இது இந்திய விமானப்படைக்கு பெரிதும் உதவும்’ எனக் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.