அதிவேக நெடுஞ்சாலைகளில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

பண்டிகைக் காலத்தில் அதிவேக நெடுஞ்சாலைகளில் போக்குவரத்தில் ஈடுபடும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன.
வழமையான தினங்களில் நெடுஞ்சாலைகளில் 75 ஆயிரம் முதல் 80 ஆயிரம் வரையிலான வாகனங்கள் போக்குவரத்தில் ஈடுபடுகின்றன.
எனினும், இந்தப் பண்டிகைக் காலத்தில் நாளொன்றிற்கு ஒரு இலட்சத்து 5 ஆயிரத்திலிருந்து ஒரு இலட்சத்து 10 ஆயிரம் வரையிலான வாகனங்கள் போக்குவரத்தில் ஈடுபடுவதாக அதிவேக நெடுஞ்சாலை மற்றும் முகாமைத்துவப் பணிப்பாளர் எஸ்.ஓபநாயக்க தெரிவித்துள்ளார்
வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்புக்கு அமைவாக சகல வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. வாகனங்கள் உள்நுழைதல் மற்றும் வெளிச் செல்வதற்கான மேலதிக வாயில்களும் திறக்கப்பட்டுள்ளன. மேலதிக ஊழியர்களும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் பணிப்பாளர் கூறினார்.
மேலும், வாகனங்களின் தரத்தை பரிசோதனை செய்து உறுதிப்படுத்தப்படும் வாகனங்களே நெடுஞ்சாலைக்குள் உட்பிரவேசிக்க அனுமதிக்கப்படுகின்றன எனவும் மணித்தியாலத்திற்கு 60 முதல் 80 கிலோமீற்றர் வேகத்தில் பயணிக்கக்கூடிய வாகனங்கள் மாத்திரமே அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்க முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
டுபாயில் இரண்டாவது டோஸ் கொவிட்-19 தடுப்பூசியை போடும் பணி தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. ஏற்
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து டெலோ வெளியேறவுள்ளதாக வெளியாகிய செய்திகள் உண்மைக்கு புறம்பானது
-
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 4 ஆவது வருட பூர்த்தியை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் இடம்பெறும் தொகுதி அ
-
பிக் பேஷ் ரி-20 லீக் தொடரின் 40ஆவது லீக் போட்டியில், மெல்பேர்ன் ஸ்டார்ஸ் அணி 111 ஓட்டங்களால் அபார வெ
-
கொரோனா தடுப்பூசி போடும்போது மேற்கொள்ள வேண்டிய விதிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதற்கமைய, கொர
-
இலங்கையில் வெளிநாட்டில் இருந்து வந்த மேலும் நான்கு பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகா
-
இலங்கை நாடாளுமன்றில் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடும் பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்பட
-
கிளிநொச்சி கொரோனா சிகிச்சை நிலையத்தில் 154பேர், தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருவதாக தொற்றுநோயியல் வை
-
உலக பிரசித்தி பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்
-
இலங்கையில் நேற்றைய தினம் (வெள்ளிக்கிழமை) அடையாளம் காணப்பட்ட 695 கொரோனா தொற்று நோயாளிகள் தொடர்பான அறி