அத்துரலிய ரத்ன தேரருக்கு அதிகரிக்கும் ஆதரவு – நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள்!

கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களைத் தொடர்ந்து அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மற்றும் ஆளுநர்களான அசாத் சாலி, ஹிஸ்புல்லா ஆகியோர் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என கோரிக்கை வலுப்பெற்று வருகின்றது.
குறித்த மூவரும் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தி கண்டியில் அதுரலிய ரத்ன தேரர் இன்று நான்காவது நாளாகவும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்.
இந்தநிலையில் அத்துரலிய ரத்ன தேரருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், இன்று கம்பளை நகரிலுள்ள சகல வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை தேரருக்கு ஆதரவு தெரிவித்து, களுத்துறை, அளுத்கமையில் பேருந்துகளின் சாரதிகள் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
அத்துடன், அத்துரலிய ரத்ன தேரரின் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, சிலாபம் நகரில் பொதுமக்கள் ஒன்றிணைந்து அமைதிவழி போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
இதேவேளை, வரக்காபொல நகரில் கறுப்புக் கொடி போராட்டம் ஒன்று தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அத்துரலிய ரத்ன தேரருக்கு ஆதரவு தெரிவித்தும் அமைச்சர் ரிஷாட், ஆளுநர்களான ஹிஸ்புல்லா, அஸாத் சாலி ஆகியோரைப் பதவி விலகுமாறு கோரி, இந்த கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், வரக்காபொல நகரில் உள்ள சிங்கள, முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.