அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு மோடி அழைப்பு!
In இந்தியா January 20, 2021 5:29 am GMT 0 Comments 1360 by : Krushnamoorthy Dushanthini

அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் வரவு செலவுக் கூட்டத்தொடா் வரும் 29-ஆம் திகதி ஆரம்பமாகிறது. பெப்ரவரி முதலாம் திகதி 2021-22 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு தாக்கல் செய்யப்படவுள்ளது.
கொரோனா நோய்தொற்று பரவலைக் கருத்தில் கொண்டு பாதுகாப்பு விதிமுறைகளுடன் இந்தக் கூட்டத்தொடரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்டத் தொடா் இரு கட்டங்களாக நடைபெறுகிறது.
இந்நிலையில் வரவு செலவு கூட்டத்துக்கு முன்பாக வரும் 30 ஆம் திகதி அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு பிரதமர் நரேந்திரே மோடி அழைப்பு விடுத்துள்ளார். கூட்டத்துக்கு மோடி தலைமை தாங்குகிறார். கூட்டமான காணொலி மூலம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.