அனைத்து மதங்களுக்கும் விகிதாசார அடிப்படையில் நிதியை ஒதுக்கீடு செய்யுங்கள்- சாணக்கியன் வேண்டுகோள்!
In ஆசிரியர் தெரிவு November 23, 2020 2:35 pm GMT 0 Comments 1537 by : Litharsan

அனைத்து மதங்களுக்கும் விகிதாசார அடிப்படையில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சுக் குழுக் கூட்டம் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்றுள்ளது.
இதன்போது, பௌத்த மதத்திற்கு 300 மில்லியன் ரூபாயும், இந்து மதத்திற்கு 8 மில்லியன் ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இதற்கு எதிர்ப்பு வெளியிட்ட இரா.சாணக்கியன், ஏனைய மதங்களுக்கும் விகிதாசார அடிப்படையில் பணம் ஒக்கீடு செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயற்பாடுகள் குறித்து கவனம் செலுத்தும் வகையில் பிரதமர் தலைமையில் ஆணைக்குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும் எனவும் சாணக்கியன் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், குறித்த ஆணைக்குழுவின் ஊடாக இவ்வாறான நிதியொதுக்கீடுகளை முன்னெடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
இன்றைய கூட்டத்தின்போது அதன் உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டிருந்த ஆவணங்களின் அடிப்படையிலேயே இரா.சாணக்கியன் மேற்கண்ட விடயங்களை முன்வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.