அன்னை பூபதியின் நினைவு தினத்தை முன்னிட்டு வவுனியாவில் ஆர்ப்பாட்ட பேரணி
In ஆசிரியர் தெரிவு April 19, 2019 10:35 am GMT 0 Comments 2398 by : Dhackshala
அன்னை பூபதியின் 31ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களால் ஆர்ப்பாட்ட பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது.
தமிழர் தாயகத்தில் படையினரிடம் கையளிக்கப்பட்டும், கடத்தப்பட்டும் காணாமலாக்கப்பட்ட உறவுகளைத் தேடி கண்டறியும் சங்கத்தின் ஏற்பாட்டில் இந்த ஆரப்பாட்ட பேரணி முன்னெடுக்கப்பட்டது.
வவுனியா கந்தசுவாமி கோயிலில் ஆரம்பமாகிய இந்த ஆர்ப்பாட்டப் பேரணி வவுனியா மணிக்கூட்டு கோபுரம் வழியாக அஞ்சல் அலுவலகத்திற்கு அருகாமையில் காணாமற்போன உறவுகளினால் சுழற்சி முறையில் உண்ணாவிரதம் இருக்கும் இடத்தை வந்தடைந்தது.
இதன்போது காணாமற்போனவர்களின் உறவினர்கள் அன்னை பூபதியின் நினைவேந்தல் பதாதையை தாங்கியவாறும் அமெரிக்க, ஐரோப்பிய கொடிகளை ஏந்தியவாறும் பேரணியில் ஈடுபட்டிருந்தனர். மேலும் காணாமற்போனவர்களின் உறவினர்களால் அன்னை பூபதியின் உருவப்படத்திற்கு மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
காணமற்போனோரின் உறவுகளால் வவுனியாவில் சுழற்சி முறை உண்ணாவிரத போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் 790ஆவது நாள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
ரஷ்யாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 70ஆயிரத்தைக் க
-
வேளாண் சட்டங்களுக்கு எதிராக ட்ராக்டர் பேரணியை முன்னெடுத்துள்ள விவசாயிகள் மீது பொலிஸார் கண்ணீர்புகைக்
-
நடிகர், நடிகைகள் உள்ளிட்ட பலரது வாழ்க்கையை ஓ.டி.டி. தளங்கள் காப்பாற்றும் என நடிகை வித்யா பாலன் தெரிவ
-
டிசம்பர் மாதத்தில் மட்டும் கிட்டத்தட்ட 30,000பேர் வேலைகளை இழந்துள்ளதாக கனடியத் தேசிய வேலைவாய்ப்பு அற
-
நடிகர் விஜய் தேவரகொண்டா கம்பீரமான ஒரு நாயை வளர்த்து வருகிறார். அந்த நாய் தனது மடியில் உட்கார்ந்து இர
-
ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவி தகுதியான வேறு ஒருவருக்கு வழங்கப்பட வேண்டும் எனவும் அத
-
பூநகரி கடல் பிரதேசத்தில் மேற்கொள்ளப்படுகின்ற அனைத்து வகையான சட்டவிரோத கடற்றொழில் முறைகளும் நிறுத்தப்
-
ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்காவின் புதிய நிர்வாகம் தொடர்ந்தும் மனித உரிமை விவகாரங்களில் இலங்கைக்கு அழ
-
இலங்கையில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 51ஆயிரத்தை கடந்துள்ளது என சுகாதார
-
கொரோனா வைரஸ் தாக்கத்தினால் வேலையின்மை வீதம் நவம்பர் முதல் மூன்று மாதங்களில் 5 சதவீதமாக உயர்ந்துள்ளது