அப்பாவிகளை கொலைசெய்வது வீரமல்ல: அருட்தந்தை ஜோய் மரியரட்னம்
இறைவனின் அருளைப் பெறவந்த அப்பாவி பக்தர்களின் உயிர்களை பறிப்பது வீரமும் இல்லை. நியாயமும் இல்லை. அதுவும் கடவுள் பெயரால் உயிர்களை பறிப்பது கண்டனத்திற்கு உரியது என அருட்தந்தை ஜோய் அரியரட்னம் தெரிவித்தார்.
கொழும்பு கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்தில் கடந்த வாரம் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலையடுத்து, இன்று (ஞாயிற்றுக்கிழமை) தேவாலயத்தின் முன்பாக பக்தர்கள் கூடியிருந்து கண்ணீர் மல்க பிரார்த்தித்தனர்.
இதன்போது எமது ஆதவன் செய்திப்பிரிவிற்கு கருத்துத் தெரிவித்தபோதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். குண்டுத்தாக்குதல் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் திருப்பலி ஒப்புக்கொடுத்த அருட்தந்தை இவரே.
அவர் எம்மிடம் தொடர்ந்து தெரிவித்ததாவது, எந்த மதத்திலும் இன்னொருவரை கொல்லுமாறும் வேதனையை ஏற்படுத்துமாறும் கூறவில்லை. அப்படியிருக்கையில் உயிரை பறிக்கும் உரிமை எவருக்கும் கிடையாது என மேலும் தெரிவித்தார்.
இதேவேளை அடுத்த ஞாயிற்றுக்கிழமை ஓரளவுக்கு திருப்பலிகளை ஒப்புக்கொடுக்க முடியுமென எதிர்பார்ப்பதாகவும் அருட்தந்தை தெரிவித்தார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
ராமஜென்பூமி வழக்கில் உச்சநீதிமன்ற அளித்த தீா்ப்பின்படி உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ஒதுக்கப்பட்
-
இலங்கை அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 7 விக்கட்டுகளினால் வெற்றி பெற்றுள்
-
பருத்தித்துறையில் திரையரங்கு ஒன்று கொவிட் -19 சுகாதார கட்டுப்பாடுகளை மீறி இயங்கியதால் சுகாதாரத் துறை
-
டெல்லியில் குடியரசு தினத்தன்று திட்டமிட்டப்படி டிராக்டா் பேரணி நடைபெறும் என்று விவசாயிகள் சங்கங்கள்
-
வெளிநாடுகளில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் 183 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர். அவர்கள் 6 விமான
-
அமெரிக்காவில் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் மாத்திரம் ஒரு இலட்சத்து 74 ஆயிரத்து 560 கொரோனா தொற்றாளர்
-
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் அச்சம் காரனமாக நிறுத்தப்பட்டிருந்த புகையிரதே சேவைகள், இன்று (திங்க
-
கொரோனா வைரஸ் தடுப்பூசியை செலுத்தும் பணி பெப்ரவரி இறுதி வாரத்தில் அல்லது மார்ச் மாத தொடக்கத்தில் அரசா
-
யாழ்ப்பாணத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்டிருந்த அனைத்து பொது சந்தைகளும் இன்று (திங்கட்கி
-
கனடாவில் கொரோனா தொற்றினால், மொத்தமாக 18 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மைய உத்தியோக