அப்பாவி முஸ்லிம்களை வருத்தாது ராஜபக்ஷ அணியை விசாரியுங்கள்: நாடாளுமன்றில் ஸ்ரீதரன்
நாட்டில் அரங்கேற்றப்பட்ட கொடூரங்கள் தொடர்பாக அப்பாவி முஸ்லிம் மக்களை வருத்தாது, முன்னாள் ஜனாதிபதி உள்ளிட்ட அணியினரை விசாரிக்குமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாட்டின் தற்போதைய பாதுகாப்பு குறித்து நாடாளுமன்றத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அடிப்படைவாதத்தை மையமாகக் கொண்டு ஒரு குழு ஈடுபட்டிருக்கையில், அதற்காக முஸ்லிம்கள் பழிவாங்கப்படுவதும் மனரீதியில் பாதிக்கப்படுவதும் உடனடியாக நிறுத்தப்படவேண்டிய ஒன்றாகும் எனத் தெரிவித்தார்.
மேலும், தமிழினம் இம்சிக்கப்படுவதை இராணுவம் மகிழ்ச்சியோடு பார்க்கிறது என்றும் அவர் விமர்சித்துள்ளார். ராணுவம் இவ்வாறு மகிழ்வுடன் ஒரு இனத்தை அடக்க முயல்கின்றமையானது, இவ்விடயங்களின் பின்னணியில் இராணுவம், புலனாய்வுத்துறை மற்றும் முன்னாள் ஜனாதிபதியின் அணியினர் காணப்படுகின்றனர் என்பதை வெளிப்படுத்துகிறது.
எனவே, அப்பாவி முஸ்லிம்களை வருத்தாது, முன்னாள் ஜனாதிபதி உள்ளிட்ட அணியினரை விசாரித்து உண்மையை கண்டறியுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஊடாகவே தமிழ் தேசிய கூட்டமைப்பினர் என்னை சிறையில் அடைத்தார்
-
உலகின் ஒன்பது நாடுகளுக்கு 60 இலட்சம் ‘டோஸ்’ கொரோனா தடுப்பு மருந்தை ஏற்றுமதி செய்துள்ளதாக
-
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசிகள் நாளை நாட்டை வந்தடையும் என அறிவிக்க
-
கொரோனா வைரஸின் தாக்கம் அடுத்த 4 முதல் 5 ஆண்டுகள் வரை நீடிக்கலாம் என சிங்கப்பூரின் கல்வித்துறை அமைச்ச
-
வடக்கு மாகாணத்தில் மேலும் 18 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வட.மாகாண சுகாதார
-
இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. அந்தவகையில் நேற்று
-
பிரேசில் நாட்டில் பேருந்தொன்று மலைக்குன்றில் இருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளானதில் 19 பயணிகள் உ
-
நாடு திரும்புவதற்கு எதிர்பார்த்துள்ள வெளிநாட்டில் பணிபுரியும் பணியாளர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்
-
இலங்கையில் புதிய வகை கொரோனா வைரஸ் இனங்காணப்பட்டுள்ளதாக ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது
-
சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று வந்த சசிகலா இன்று (புதன்கிழமை) விடுதலை செய்யப்படுகிறார். சொ