அமித் ஷாவின் சென்னை வருகை ரத்து!
In இந்தியா January 6, 2021 1:31 pm GMT 0 Comments 1326 by : Jeyachandran Vithushan

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் சென்னை வருகை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா எதிர்வரும் 14ஆம் திகதி சென்னை வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
அத்துடன் சென்னை வருகையின்போது அதிமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்தும் அவர் முக்கிய ஆலோசனை நடத்தலாம் எனக் கூறப்பட்டது.
அதேசமயம், நடிகர் ரஜினியையும் சந்தித்து அவரது உடல்நலம் பற்றி விசாரிக்கலாம் எனவும் தகவல் வெளியாகி இருந்தது.
முன்னதாக கடந்த நவம்பர் மாதம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அமைச்சர் அமித் ஷாவின் சென்னை வருகை ரத்து செய்யப்படுவதாக புதன் இரவு அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.