அமெரிக்காவின் அதிரடி!- சீன பங்குச்சந்தையில் சரிவு

சீன பங்குச் சந்தைகளில் இன்று (திங்கட்கிழமை) பாரிய சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனா மீது புதிய தீர்வை கட்டணங்களை விதிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நடவடிக்கை எடுத்துள்ள நிலையிலேயே சீன பங்குச்சந்தையின் சரிவு பதிவாகியுள்ளது.
இந்நடவடிக்கை சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான வர்த்தக உடன்பாட்டையும் கேள்விக்குறியாக்கியுள்ளது.
200 பில்லியனுக்கும் அதிகமான சீனப் பொருட்கள் மீது தீர்வை கட்டணங்களை இரட்டிப்பாக்குவதுடன், புதிய வரித்தீர்வைகளை அறிமுகப்படுத்தவுள்ளதாகவும் ஜனாதிபதி ட்ரம்ப் கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்தார்.
அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான பேச்சுவார்த்தை சுமூகமடைந்து வந்த நிலையில் இரு தரப்பிற்கும் இடையே வர்த்தக உடன்பாடு எட்டப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக முரண்பாடுகளை தீர்த்துக் கொள்ளும் வகையில் சீன பிரதிநிதிகள் குழுவொன்று இவ்வாரத்தில் வொஷிங்டனுக்கு விஜயம் செய்யவுள்ளது.
இவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் அமெரிக்காவின் செயற்பாடு மீண்டும் இரு நாடுகளுக்கும் இடையே முறுகல் நிலையை ஏற்படுத்தும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
ஒட்டுமொத்த தமிழினமும் ஒரே நிலைப்பாட்டில் செயற்படுவதற்காக விரைவில் நடவடிக்கைக் குழு ஒன்றை உருவாக்குவத
-
போர்த்துக்கல்லில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து காணப்படும் நிலையிலும் பெருமளவிலானவர்கள் இன்று ப
-
புதுச்சேரியில் காங்கிரஸ் – தி.மு.க கூட்டணி தொடர்ந்து நீடித்து வருவதாக அம்மாநில முதலமைச்சர் நார
-
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாள் சம்பளமாக ஆயிரம் ரூபாயை வழங்குமாறு வலியுறுத்தியும்
-
இந்தியாவில் இருந்து 13 நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி மருந்து ஏற்றுமதி செய்யப்படுகின்றமைக்கு உலக சுகாத
-
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜனின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, மட்டக
-
உக்ரேனைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளில் மேலும் சிலர் மத்தளை சர்வதேச விமான நிலையத்தை இன்று (ஞாயிற்றுக்
-
நில ஆக்கிரமிப்பு தொடர்பாக சர்வதேச நாடுகள் மற்றும் சர்வதேச ஊடகங்களின் கவனத்திற்குக் கொண்டுசெல்ல ஒரு ப
-
அனுமதி இன்றி மலேசியாவின் கடலில் அத்துமீறி நுழைந்த குற்றத்திற்காக இரண்டு படகுகளில் வந்த 16 வியட்நாமிய
-
கொரோனா தொற்றுக்கு உள்ளான அமைச்சர் வாசுதேவ நாணயக்கார மற்றும் முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஆகியோர்