அமெரிக்காவின் தடுப்பூசி விலையைவிட ஸ்புட்னிக் தடுப்பூசியின் விலை குறைவாக இருக்கும் – ரஷ்யா
In அமொிக்கா November 23, 2020 3:30 am GMT 0 Comments 1474 by : Dhackshala

அமெரிக்காவின் மாடர்னா மற்றும் பைசர் நிறுவனத்தைவிட தங்கள் தடுப்பூசியின் விலை குறைவாக இருக்கும் என ரஷ்யாவின் ஸ்புட்னிக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கொரோனா தடுப்பூசியின் இறுதிக்கட்ட சோதனை பல நாடுகளிலும் நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் அவற்றுக்கான விலைகள் குறித்தும் பேசப்பட்டு வருகின்றன.
அமெரிக்காவின் மாடர்னா நிறுவன தடுப்பூசியின் ஒரு டோஸ் விலை சுமார் ரூ.1,875 முதல் ரூ.2,775 வரையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த நாட்டின் பைசர் நிறுவன தடுப்பூசியின் ஒரு டோஸ் விலை சுமார் ரூ.1,500 என தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், அமெரிக்க தடுப்பூசிகளை விட ரஷ்யா தயாரித்துள்ள ஸ்புட்னிக்-வி தடுப்பூசியின் விலை மிகவும் குறைவாக இருக்கும் என்று அதன் அதிகாரபூர்வ இணையதளம் கூறியுள்ளது.
மேலும் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியின் விலை அடுத்த வாரம் அறிவிக்கப்படும் என ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.