அமெரிக்காவில் ஒன்றரைக் கோடியைக் கடந்த கொரோனா பாதிப்பு
In அமொிக்கா December 7, 2020 3:33 am GMT 0 Comments 1305 by : Dhackshala

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்படைந்தோரின் எண்ணிக்கை ஒன்றரைக் கோடியைக் கடந்துள்ளது.
கொரோனா வைரஸின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா தொற்றால் அதிக பாதிப்பை எதிர்கொண்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.
அங்கு கொரோனாவின் தாக்கம் வேகமாக அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்படைந்தோரின் எண்ணிக்கை 1 கோடியே 51 இலட்சத்து 59 ஆயிரத்து 529 ஆக பதிவாகியுள்ளது.
இதேநேரம், அங்கு கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2 இலட்சத்து 88 ஆயிரத்து 906ஆக பதிவாகியுள்ளது.
மேலும் கொரோனாவில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 88 இலட்சத்து 55 ஆயிரத்து 593 ஆக காண்பபுடுகிறது.
இதனையடுத்து சுமார் 60 இலட்சத்துக்கும் அதிகமானோர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.