அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசியை அவசரமாகப் பயன்படுத்த அனுமதி!

அமெரிக்காவின் ஃபைசர் மருந்து நிறுவனம், தான் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசியை அவசரமாகப் பயன்படுத்த அனுமதிக்குமாறு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்திடம் (எப்.டி.ஏ.) அனுமதி கோரியுயிருந்த நிலையில் இதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மூன்றாம் கட்ட பரிசோதனைகளை மிகப்பெரிய அளவில் நடத்தியுள்ள, அந்நிறுவனத்தின் ஆய்வு முடிவுகளை பரிசீலித்த பிறகு, அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் வல்லுநர் குழு, இதற்கான அனுமதியை வழங்கியது.
இதன்படி, 16 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்தும் வகையில் தடுப்பூசியை பயன்பாட்டிற்கு கொண்டு வர ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, ஃபைசர் தடுப்பூசியை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர ஒரு சில நாட்களில் அமெரிக்கா அங்கீகாரம் அளிக்கும் என கூறப்படுகிறது.
முன்னதாக அமெரிக்காவில் இந்த ஆண்டு இறுதிக்குள் 4 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் பயன்பாட்டிற்கு கிடைக்கும் என வெள்ளை மாளிகை தெரிவித்திருந்தமை நினைவுக்கூரத்தக்கது.
பைசர் இன்க் மற்றும் பயோஎன்டெக் ஆகிய நிறுவனங்களால் தயாரிக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் (கொவிட்-19) தடுப்பூசிக்கு பிரித்தானியா ஒழுங்குமுறை ஒப்புதல் அளித்து அங்கு தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.