அமெரிக்காவில் கோட்டாவுக்கு எதிரான வழக்கு: யஸ்மின் ஷூக்காவின் ஊடக சந்திப்பில் நடந்தது என்ன?
கோட்டாபயவிற்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பான ஆவணங்கள் கையளிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான வழக்கு விசாரணைகளும் இடம்பெறவுள்ளன.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் இலங்கையில் இடம்பெற்ற யுத்தக்குற்றங்கள் குறித்து யஸ்மின் ஷூக்கா உன்னிப்பாக கவனஞ்செலுத்தி வருகின்றார். இந்நிலையில், கோட்டாபய ராஜபக்ஷ மீதான வழக்குகள் குறித்தும் அவர் அவதானம் செலுத்தியுள்ளார்.
அந்தவகையில், நேற்று கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு குறித்து ஊடக சந்திப்பு ஒன்றை இன்று (செவ்வாய்க்கிழமை) லண்டனில் யஸ்மின் ஷூக்கா நடத்தியுள்ளார்.
அந்த ஊடக சந்திப்பில் குறித்த வழக்குகளில் ஒன்றைத் தாக்கல் செய்த கனேடியப் பிரஜையான ரோய் சமாதானம் என்பவரும் பங்குபற்றினார்.
குறித்த ஊடக சந்திப்பிலே கலந்துகொண்ட, இனப்படுகொலையை தடுப்பதற்கும் தண்டிப்பதற்குமான சர்வதேச அமைப்பின் ஊடக இணைப்பாளராக செயற்படும் ஊடகவியலாளர் அல்வின் சுகிந்தன் எமது செய்திப் பிரிவோடு குறித்த விடயம் தொடர்பாக கலந்துரையாடினார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
நீதிமன்றம் சட்டத்தின் உதவியை நாடும் மக்களின் இல்லமாக மாற வேண்டும் என விரும்புவதாக பிரதமர் மஹிந்த ராஜ
-
நாட்டில் மேலும் 383 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு
-
தாய்வானுடன் மோதல் போக்கை தவிர்த்து அர்த்தமுள்ள பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என சீனாவுக்கு அமெரி
-
கொரோனா தடுப்பூசி குறித்து வதந்தி மற்றும் அவதூறு பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று
-
கடந்த ஜனவரி 15ஆம் திகதி வரை, நோய்த்தடுப்பு மருந்துகளைத் தொடர்ந்து 90 பாதகமான நிகழ்வுகள் பதிவாகியுள்ள
-
எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறஉள்ள கல்வி பொதுத் தராதர சாதாரணதர பரீட்சையின் விடைத்தாள் திருத்தும் பணி
-
இலங்கை அணிக்கெதிரான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகளால் வெற்
-
பிக் பேஷ் ரி-20 தொடரின், 53ஆவது லீக் போட்டியில் சிட்னி தண்டர் அணி 9 விக்கெட்டுகளால் அபார வெற்றிபெற்ற
-
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் உயர் நீதிமன்ற வளாகம் அருகே நீதியமைச்சின் புதிய கட்டிடத்துக்கான கட்ட
-
ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண் தேஜா, ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் வெளியீட்