அமெரிக்காவில் 908 பில்லியன் டொலர் கொரோனா நிவாரண நிதி சட்டமூலம் தாக்கல்
In அமொிக்கா December 2, 2020 8:34 am GMT 0 Comments 1366 by : Jeyachandran Vithushan

அமெரிக்காவின் இருதரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களும் 908 பில்லியன் டொலர் மதிப்புகொண்ட கொரோனா நிவாரண நிதி குறித்த சட்டமூலத்தை தாக்கல் செய்துள்ளனர்.
சிறிய வர்த்தகங்களுக்கும் வேலைகளை இழந்தவர்களுக்கும் வைரஸ் பரவலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள விமான நிறுவனங்கள் போன்ற துறைகளுக்கும் கைகொடுப்பது நிதியின் நோக்கம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நிவாரண நிதிக்கான மசோதா இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்றபோதும் குடியரசுக் கட்சி உறுப்பினர்களும் ஜனநாயகக் கட்சி உறுப்பினர்களும் அதற்கு அங்கீகாரம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.