அமெரிக்க கலவரம்: இதுவரை நால்வர் உயிரிழப்பு- 52பேர் கைது!

அமெரிக்க செனட் சபை அமைந்துள்ள கெப்பிட்டல் ஹில் கட்டட தொகுதியில் இடம்பெற்ற கலவரத்தில் நால்வர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் 52பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 47 பேர் ஊரடங்கு உத்தரவை மீறியதற்காக கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், 5 ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரமப்பின் ஆதரவாளர்கள், செனட் சபையின் கெப்பிட்டல் ஹில் கட்டட தொகுதிக்குள் அத்துமீறி பிரவேசித்ததை அடுத்து, பொலிஸார் துப்பாக்கி சூடு நடத்தினர்.
ஆரம்பத்தில் இந்த கலவரத்தில் பொலிஸார் சுட்டதில் ஒரு பெண் இறந்தார். இது தவிர, மருத்துவ அவசர நிலை காரணமாக மூன்று பேர் இறந்துள்ளனர். இதனை வொஷிங்டன், டி.சி., பொலிஸ்துறைத் தலைவர் ராபர்ட் கான்டி உறுதிப்படுத்தியுள்ளார்.
இதேவேளை, அமெரிக்காவின் வொஷிங்டன் டிசியில் பிறப்பிக்கப்பட்ட அவசரநிலை மேலும் 15 நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.
ட்ரம்ப் ஆதரவாளர்களின் வன்முறை போராட்டங்கள்: உலக தலைவர்கள் கண்டனம்!
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.