அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்: ஜோர்ஜியா மாநிலத்தில் ஜோ பிடனின் வெற்றி உறுதியானது!

அமெரிக்காவின் ஜோர்ஜியா மாநிலத்தில் மீண்டும் வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், வாக்கு எண்ணிக்கை முடிவில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன், வெற்றிபெற்றதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஜனநாயகக் கட்சி, ஜோர்ஜியாவில் தனது குடியரசுக் கட்சி போட்டியாளரை 12,284 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.
பொது வாக்குகளில் பிடனின் வெற்றி அளவு ஒட்டுமொத்தமாக 5.9 மில்லியனுக்கும் அதிகமாக உள்ளது.
16 இடங்களைத் தீர்மானிக்கும் ஜோர்ஜியாவின் தேர்தல் முடிவுகள், மாநில செயலாளரின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த வெற்றியின் மூலம், 28 ஆண்டுகளுக்குப் பிறகு ஜோர்ஜியா மாநிலம் ஜனநாயக கட்சியின் வசம் சென்றுள்ளது. 28ஆண்டுகளில் முதல்முறையாக வெற்றி பெற்ற ஜனநாயக ஜனாதிபதி வேட்பாளர் என்ற பெருமையை ஜோ பிடன் பெற்றுள்ளார். 1992ஆம் ஆண்டில் பில் கிளிண்டன் வெற்றி பெற்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
46ஆவது அமெரிக்க ஜனாதிபதியாக ஜனவரி மாதம் ஜனநாயகக் கட்சியின் ஜோ பிடன் பதவியேற்க உள்ளார்.
நவம்பர் 3ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில், ஜோர்ஜியா மாநிலத்தில், ட்ரம்புக்கும், பிடனுக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் குறைந்த அளவில் இருந்தால் மறு வாக்கு எண்ணிக்கைக்கு மாநில அரசாங்கம் உத்தரவிட்டது. இதன்படி வாக்குகள் மீண்டும் எண்ணப்பட்டன.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.