அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் மார்க் எஸ்பர்ரை பதவியில் இருந்து நீக்கினார் ட்ரம்ப்!
In அமொிக்கா November 10, 2020 9:45 am GMT 0 Comments 1800 by : Jeyachandran Vithushan

அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் மார்க் எஸ்பர்ரை பதவியில் இருந்து நீக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நடவடிக்கை எடுத்துள்ளார்.
இது குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், பாதுகாப்பு செயலாளரின் பணிகள் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் தற்போது பயங்கரவாத ஒழிப்பு தேசிய மையத்தின் பொறுப்பாளரான கிரிஸ்டோபர் மிலரை பதில் பாதுகாப்புச் செயலாளராக நியமிக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார்.
மார்க் எஸ்பருக்கும் ஜனாதிபதி ட்ரம்புக்கும் இடையில் அண்மை காலமாக இருந்து வந்த உக்கிர கருத்து மோதல்கள் காரணமாகவே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கலாம் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி ட்ரம்புக்கு பதவியில் தங்கியிருக்க இன்னும் ஒருசில வாரங்களே காணப்படுகின்ற நிலையில் அவர் தொடர்ந்தும் தனது நிறைவேற்று அதிகாரங்களை பயன்படுத்தி வருவதை அவதானிக்க முடிகின்றது.
இதேவேளை அண்மையில் நிறைவடைந்த தேர்தல் பெறுபேறுகளுக்கு எதிராக நீதிமன்றத்தை நாடவுள்ளதாகவும் வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.