அமெரிக்க- பிரித்தானிய கொவிட்-19 தடுப்பூசிகளை இறக்குமதி செய்வதற்கு ஈரான் தடை!

அமெரிக்காவின் ஃபைஸர் நிறுவனமும் பிரித்தானியாவின் அஸ்ட்ராஸெனெகா நிறுவனமும் உருவாக்கியுள்ள கொரோனா வைரஸ் இறக்குமதி செய்வதற்கு ஈரான் தடை விதித்துள்ளது.
அந்த இரு நாடுகளிலும் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அவை தயாரிக்கும் தடுப்பூசிகள் நம்பத் தகுந்தவை அல்ல என தலைமை மதகுரு அயதுல்லா கமேனி தெரிவித்துள்ளார்.
மேலும், தங்களது தடுப்பூசிகளை பிற நாட்டு மக்களுக்குச் செலுத்தி பரிசோதிக்க அமெரிக்காவும் பிரித்தானியாவும் விரும்புவதாக அவர் தெரிவித்தார்.
அண்மையில் ஈரான், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தடுப்பூசியை முதல் முறையாக பரிசோதித்தது.
உள்ளூர் கொரோனா வைரஸ் தடுப்பூசி முயற்சிகளைக் கவனிக்கும் ஒரு அரசாங்கம் நடத்தும் நிறுவனமான ‘ஷிஃபா பார்மட்’ நிறுவனம் தயாரித்த இந்த தடுப்பூசிக்கு ‘கொவிரன் பரேகாட்’ என பெயரிடப்பட்டுள்ளது.
எட்டு தடுப்பூசி நிறுவனங்களில் ஏழு நிறுவனங்கள் பெப்ரவரி மாத பிற்பகுதியில் விலங்கு சோதனைகளை தொடங்கவுள்ளது.
65,000க்கும் மேற்பட்ட ஈரானியர்கள் தடுப்பூசியை பரிசோதிக்க முன்வந்ததாகவும், முதல் கட்ட மனித சோதனைகளில் பங்கேற்க 56பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், அவை 45 முதல் 60 நாட்கள் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.