அமெரிக்க மருந்து நிறுவனத்தின் நல்ல செய்தி- ட்ரம்ப் ருவிற்றரில் பதிலளிப்பு

அமெரிக்காவின் ஃபைசர் மருந்து நிறுவனமும் ஜேர்மனியின் பயோஎன்டெக் மருந்து நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசியின் இறுதிக்கட்ட ஆய்வு முடிவுகளின் முதல் பகுதி இன்று வெளியானது.
இதன்படி, இந்தத் தடுப்பூசி 90 சதவீதம் கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்கிறது என ஃபைசர் நிறுவனம் அறிவித்துள்ளது.
தடுப்பூசி குறித்த புதிய அறிவிப்பு வெளியான சில நிமிடங்களில் பங்குச் சந்தையில் அந்நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பு பல மடங்கு உயர்ந்துள்ளது.
இந்தத் தடுப்பூசியில் மிகப்பெரிய அளவில் பக்கவிளைவுகள் எதுவும் ஏற்படவில்லை என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று தனது ருவிற்றர் பதிவில் குறிப்பிட்டுள்ள அவர், தடுப்பூசி மிக விரைவில் வந்துகொண்டிருக்கிறது எனவும் தடுப்பூசி 90 சதவீதம் பலனளிக்கிறது என்பது மிகவும் நல்ல செய்தி என்றும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் அறிவிக்கப்பட்டு இரண்டு நாட்கள் கடந்த நிலையில் கொரோனா தடுப்பு மருந்து குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.