அம்பாறையில் சீரற்ற காலநிலை; அக்கரைப்பற்றில் 100 மில்லி மீட்டர் மழை வீழ்ச்சி பதிவு
In அம்பாறை December 22, 2020 4:29 am GMT 0 Comments 1421 by : Yuganthini

அம்பாறை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக பலத்த மழை பெய்து வருவதுடன் குளிரான காலநிலை நிலவி வருகின்றது.
மேலும், அக்கரைப்பற்று பிரதேசத்தில் 100 மில்லி மீட்டர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் ஏ.எம்.சி.முகம்மட் ரியாஸ் தெரிவித்தார் .
இதேவேளை அனைத்து பிரதேச செயலகங்களும், திணைக்களங்களுக்கும் அனர்த்த நிலை தொடர்பில் 24 மணி நேரமும் தயார் நிலையில் இருக்குமாறும் மாவட்ட செயலகத்தினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்படும் மக்களுக்கு உதவிகளை விரைந்து செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ள திணைக்கள பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் தயார் நிலையில் இருக்க, மாவட்ட செயலகத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளதாக அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைதுவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் குறிப்பிட் டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.