அம்பாறையில் ரோந்து நடவடிக்கையில் இராணுவத்தினர்!
In இலங்கை November 14, 2020 10:35 am GMT 0 Comments 1568 by : Vithushagan
அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளில இராணுவத்தின் மோட்டார் சைக்கிள் படையணி ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறது.
பகல், இரவு நேரங்களில் வீதிகளில் செல்லும் சந்தேகத்துக்கிடமான வாகனங்களை இராணுவத்தினர் சோதனையிட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கொரோனா வைரஸ் பரவலுக்குப் பின்னர் அம்பாறையில் அதிகரித்து வரும் கஞ்சா கடத்தல், சட்டவிரோதமான மணல் அகழ்வு போன்றவற்றைக் கட்டுப்படுத்தவும், கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கான சுகாதாரப் பாதுகாப்பு வழிகாட்டல்களை மீறுவோரை கண்காணிக்கவும் இராணுவத்தினர் இவ்வாறு சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இம்மோட்டார் சைக்கிள் படையணியானது அம்பாறை மாவட்டத்தில் மருதமுனை,கல்முனை, நற்பிட்டிமுனை, நாவிதன்வெளி,சாய்ந்தமருது, காரைதீவு, நிந்தவூர், சம்மாந்துறை, அட்டாளைச்சேனை ஆகிய பகுதிகளில் ரோந்து நடவடிக்கை ஈடுபட்டு வருகின்றமைக் குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.