அயர்லாந்தில் கொவிட்-19 தடுப்பூசிகள் போடும் பணிகள் நாளை ஆரம்பம்!

அயர்லாந்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தடுப்பூசிகள் போடும் பணிகள் நாளை (செவ்வாய்க்கிழமை) ஆரம்பமாகவுள்ளது.
திட்டமிட்டதை விட ஒரு நாள் முன்னதாக, தடுப்பூசிகள் போடும் பணிகள் தொடங்குவதாக நாட்டின் சுகாதார சேவையின் தலைவர் பால் ரீட் அறிவித்துள்ளார்.
முன்னதாக, அயர்லாந்து குடியரசில் முதல் தடுப்பூசிகள் புதன்கிழமை வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
பதிவு மற்றும் ஒப்புதல் செயற்பாட்டில் குழுவினர் ஈடுபட்டு வருவதாக சுகாதார சேவையின் தலைவர் தெரிவித்துள்ளார்.
டப்ளினில் உள்ள செயின்ட் ஜேம்ஸ் மருத்துவமனை மற்றும் பியூமண்ட் மருத்துவமனை மற்றும் கார்க் மற்றும் கால்வே பல்கலைக்கழக மருத்துவமனைகளில் குறைந்த எண்ணிக்கையிலான மக்கள் செவ்வாய்க்கிழமை ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசி பெறுவார்கள்.
அயர்லாந்து தனது முதல் தொகுதி தடுப்பூசியை சனிக்கிழமை பெற்றது. இந்த விநியோகம் ஐரோப்பிய ஒன்றிய அளவிலான தடுப்பூசியின் ஒரு பகுதியாக இருந்தது.
அனைத்து 27 உறுப்பு நாடுகளும் ஒரு விநியோக தொதியை பெற்றன. சில நாடுகள் உடனடியாக தடுப்பூசிகளை போட முடிவு செய்தன.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.