அயர்லாந்துக்கு எதிரான மூன்றாவது போட்டியிலும் வெற்றிபெற்று தொடரை கைப்பற்றியது ஆப்கானிஸ்தான் அணி
In கிாிக்கட் January 27, 2021 8:21 am GMT 0 Comments 1893 by : Jeyachandran Vithushan

அயர்லாந்து அணிக்கு எதிரான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்று ஆப்கானிஸ்தான் அணி தொடரை கைப்பற்றியுள்ளது.
அபுதாவியில் இன்று நடைபெற்ற குறித்த போட்டியில் 36 ஓட்டங்களினால் அயர்லாந்தை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அணி 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது.
குறித்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்களை இழந்து 266 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
அவ்வணி சார்பாக ரஷீத் கான் 48 ஓட்டங்களையும் அணித்தலைவர் அஸ்கர் ஆப்கான் 41 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொண்டனர். பந்துவீச்சில் அயர்லாந்து அணி சார்பாக கிரேக் யங் மற்றும் சிமி சிங் ஆகியோர் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர்.
இதனை அடுத்து பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து அணி 47.1 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 230 ஓட்டங்களை மாத்திரமே பெற்று 36 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.
பௌல் ஸ்டிர்லிங் 118 ஓட்டங்களை அடிக்க பந்துவீச்சில் ரஷீத் கான் 4 விக்கெட்களை வீழ்த்தினார். இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரை ஆப்கானிஸ்தான் அணி 3-0 என்ற அடிப்படையில் கைப்பற்றியுள்ளது.
குறித்த போட்டியின் ஆட்டநாயகனாக ரஷீத் கானும் தொடரின் நாயகனாக சிறப்பாக விளையாடிய பௌல் ஸ்டிர்லிங் தேர்வு செய்யப்பட்டார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.