அரசாங்கத்தின் ஜனநாயக விரோத செயற்பாட்டிற்கு எதிராக சஜித் தலைமையில் போராட்டம்
In இலங்கை December 8, 2020 2:34 am GMT 0 Comments 1691 by : Dhackshala
அரசாங்கத்தின் ஜனநாயக விரோத செயற்பாட்டிற்கு எதிராக அமைதியான போராட்டமொன்று ஐக்கிய மக்கள் சக்தியினால் முன்னெடுக்கப்பட்டது.
கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவரமான சஜித் பிரேமதாச தலைமையில் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக நேற்று (திங்கட்கிழைமை) இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்த போராட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
அரசாங்கம் அடக்குமுறை மற்றும் அரச பயங்கரவாதத்தை முன்னெடுத்து வருவதாகவும் இதன் விளைவாக மஹர சிறைச்சாலையில் பல கைதிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இதன்போது தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டவர்களின் பெயர்களை இன்னும் அரசாங்கம் வெளியிடவில்லை என்றும் இது குறித்து எதுவும் தெரியாத அவர்களது உறவினர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் இங்கு சுட்டிக்காட்டினார்.
மனித உரிமைகள் மற்றும் மனித தேவைகள் மீறப்படும் சூழ்நிலையில் அரசாங்கம் உள்ளது என்றும் இந்த அடக்குமுறைக்கு எதிராக ஒரு எதிர்க்கட்சியாகவும் ஐக்கிய மக்கள் சக்தியாகவும் போராடுவேன் என்றும் அவர் இதன்போது கூறினார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.