சொந்தங்களை கையளித்த இடம் கண்ணீரில் மூழ்கியது (3ஆம் இணைப்பு)
In ஆசிரியர் தெரிவு April 7, 2019 9:20 am GMT 0 Comments 2937 by : Dhackshala
இறுதி யுத்தத்தின்போது உறவுகளை கையளித்த இடமான முல்லைத்தீவு – வட்டுவாகல் பாலத்திற்கு அருகில் காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களால் மாபெரும் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்னால் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணியளவில் இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டோர், முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திலிருந்து, வட்டுவாகல் பாலத்தை நோக்கி பேரணியாகச் சென்றனர்.
இதன்போது ‘வட்டுவாகலில் கையளித்த எமது உறவுகள் எங்கே?’, இராணுவத்தினரின் கையில் கொடுத்த என் அப்பா எங்கே?’ போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை கைகளில் ஏந்தியவாறு காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் பேரணியாகச் சென்றனர்.
இந்த பேரணியில் பெற்றோர்கள் இளைஞர்கள் குழந்தைகளென உறவுகளைத் தொலைத்த பலரும் கலந்துகொண்டனர்.
கோசங்களை எழுப்பியவாறு வட்டுவாகல் பாலம் வரையில் சென்ற காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள், அங்கு மாபெரும் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்தனர். இதன்போது சொந்தங்களை கையளித்த இடத்தை காணாமலாக்கப்பட்டோரின் ஒறவுகள் கண்ணீரால் நனைத்தனர்.
இலங்கைக்கு கால அவகாசம் வழங்கி, இலங்கையுடன் சேர்ந்து சர்வதேசமும் தம்மை ஏமாற்றியுள்ளதாக காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் கூட்டமைப்பும் அரசிற்கு விலைபோயுள்ளதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இந்நிலையில் தம்மை ஏமாற்றிய அரசாங்கம், சர்வதேசம், கூட்டமைப்பு என அனைத்து தரப்பினருக்கும் எதிர்ப்பு தெரிவித்தே இந்த போராட்டத்தை அவர்கள் முன்னெடுத்திருந்தனர்.
வட்டுவாகலில் கையளித்த எமது உறவுகள் எங்கே? – முல்லையில் பேரணி ஆரம்பம் (2ஆம் இணைப்பு)
இறுதி யுத்தத்தின்போது உறவுகளை கையளித்த இடமான வட்டுவாகல் பாலத்தை நோக்கி பயணிக்கவுள்ள, வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களின் பேரணி தற்போது ஆரம்பமாகியுள்ளது.
இந்த பேரணி முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாகவிருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
‘வட்டுவாகலில் கையளித்த எமது உறவுகள் எங்கே?’ என்ற வாசகம் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
உறவுகளை கையளித்த இடத்தை நோக்கி பயணிக்கும் காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள்
வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களால் முல்லைத்தீவு மாவட்டத்தில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
அத்தோடு உறவுகளை கையளித்த இடமான வட்டுவாகல் பாலம் வரையில் பேரணியாக செல்ல உத்தேசித்துள்ளதாகவும் காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
அதன்படி மாவட்ட செயலகத்திற்கு முன்பாக காலை 10 மணிக்கு ஆரம்பமாகவுள்ள இந்த கவனயீர்ப்பு பேரணி, உறவுகளை கையளித்த வட்டுவால் பாலத்தில் முடிவடையவுள்ளதாக காணாமலாக்கப்பட்ட உறவினர்களின் முல்லைத்தீவு மாவட்ட இணைப்பாளர் மரிய சுரேஸ் ஈஸ்வரி தெரிவித்துள்ளார்.
இந்த போராட்டத்தில் கலந்துகொள்ளுமாறு, காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.
இலங்கைக்கு கால அவகாசம் வழங்கி, இலங்கையுடன் சேர்ந்து சர்வதேசமும் தம்மை ஏமாற்றியுள்ளதாக காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் கூட்டமைப்பும் அரசிற்கு விலைபோயுள்ளதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இந்நிலையில் தம்மை ஏமாற்றிய அரசாங்கம், சர்வதேசம், கூட்டமைப்பு என அனைத்து தரப்பினருக்கும் எதிர்ப்பு தெரிவித்தே இந்த போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.