அரசியல் விவகாரம் : மாஸ்டர் திரைப்பட வெளியீடு வரை மௌனம் காக்கிறாரா விஜய்?
In சினிமா November 11, 2020 4:32 am GMT 0 Comments 1373 by : Krushnamoorthy Dushanthini

மாஸ்டர் பட வெளியீட்டு வரையில் அரசியல் விவகாரத்தில் மௌனம் சாதிக்க விஜய் தரப்பிலும் கட்சி செயற்பாட்டினை ஜனவரி வரை தள்ளி கைக்க எஸ்.ஏ.சந்திரசேகர் தரப்பிலும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் விஜய் பெயரில் அரசியல் கட்சி ஒன்றை பதிவு செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து விஜய் தரப்பில் அறிக்கையொன்று வெளியிடப்பட்டது.
குறித்த அறிக்கையில் அரசியல் கட்சிக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என விஜய் தெரிவித்திருந்தார். இதனால் விஜய் – எஸ்.ஏ.சந்திர சேகர் உறவில் ஏற்பட்ட விரிசல் வெட்ட வெளிச்சமானதுடன் அது மேலும் பெரிதாகியுள்ளது.
இந்நிலையில் பனையூர் இல்லத்தில் மக்கள் இயக்க முக்கிய நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை நடத்த இருந்தார். இருப்பினும் குறித்த சந்திப்பில் விஜய் கலந்துகொள்ளவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.