அரசுடன் பேசுவதற்கு தமிழ் அரசியல் தரப்பின் ஒற்றுமை மிகவும் அவசியம் – சுரேன் ராகவன்
In இலங்கை December 14, 2020 2:59 am GMT 0 Comments 1446 by : Dhackshala

அரசுடன் பேசுவதற்கு தமிழ் அரசியல் தரப்பின் ஒற்றுமை மிகவும் அவசியம் என நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சியொன்றின் நேரடி அரசியல் விவாத நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு கருத்துரைத்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பெரும்பான்மை பௌத்தர்களின் அமோக ஆதரவினைப் பெற்று, ஆழமான சிங்கள தேசியத்துவத்துடன் தற்போது ஆட்சியமைத்துள்ள அரசுடன் பேசுவதற்கு தமிழ் அரசியல் தரப்பின் ஒற்றுமையும் முக்கியமானதாக காணப்படுவதாக கலாநிதி ராகவன் மேலும் தெரிவித்தார்.
மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சியிலுள்ள, தேசியவாத தென்னிலங்கை அரசுடன், தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் தொடர்பில் பேச்சுவார்த்தையை முன்னெடுப்பதற்கு, புதியதொரு அணுகுமுறையையும் அரசியல் மொழியையும் உருவாக்க வேண்டிய பொறுப்பு தமிழ் புத்திஜீவிகளுக்கும் அரசியல் பிரதிநிதிகளுக்கும் இருப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.