அரசுப்பணத்தில் விளம்பரம் – முதலமைச்சர் மீது மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
In இந்தியா January 23, 2021 9:10 am GMT 0 Comments 1349 by : Jeyachandran Vithushan

தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் நெசவுத் தொழிலையும் நெசவாளர்களின் வாழ்வாதாரத்தையும் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அதிமுக அரசு நாளிதழ்களிலும் தொலைக்காட்சியிலும் பொதுப்பணத்தில் கட்சிக்கு விளம்பரம் தேடி வருவதாகவும் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகத் திருவள்ளூர் மாவட்டம் அம்மையார் குப்பத்தில் திமுக சார்பில் நடைபெற்ற மக்கள் கிராம சபை கூட்டத்தில் உரையாற்றிய போதே மு.க.ஸ்டாலின் இவ்வாறு கூறினார்.
சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்றுத் தி.மு.க. ஆட்சிக்கு வந்தால், நெசவாளர்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணப்படும் என்றும், மிகக் குறைந்த விலையில் நூல் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
முதலமைச்சர் தேர்தல் பிரசாரங்களில் மரியாதை இல்லாமல் தரக்குறைவாக ஒருமையில் பேசிவருவதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
தமிழகத்தில் கொலை கொள்ளை, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதாகவும் ஸ்டாலின் குறிப்பிட்டார். பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் அ.தி.மு.க பிரமுகர்களின் மகன்களுக்குத் தொடர்புள்ளதாகவும் ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.
பத்தாண்டுக்கால அ.தி.மு.க. ஆட்சியில் விலைவாசி விண்ணை முட்டும் அளவு ஏறியுள்ளதாகவும் ஸ்டாலின் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.