அரச ஊழியர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் இரத்து – தமிழக அரசு
In இந்தியா February 9, 2021 2:02 pm GMT 0 Comments 1295 by : Jeyachandran Vithushan

போராட்டத்தில் ஈடுபட்ட அரச ஊழியர்கள், ஆசிரியர்கள் மீதான வழக்குகளை இரத்து செய்வதற்கான உத்தரவு அடங்கிய வர்த்தமானி அறிவித்தலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
2019 ஆம் ஆண்டு போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் மீதான வழக்குகள் கைவிடப்படும் என கடந்த வாரம் முதலமைச்சர் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் அதற்கான வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ள தமிழக அரசு, வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நிலுவையில் உள்ள சட்டம் ஒழுங்கு நடவடிக்கைகள் அனைத்தும் கைவிடப்படுமென தெரிவித்துள்ளது.
அத்தோடு தண்டனை வழங்கி இறுதி ஆணைகள் இருப்பின் அவை அனைத்தும் இரத்து செய்யப்படுவதாகவும் குற்றவியல் நடவடிக்கைகள் அனைத்தும் உடனடியாக கைவிடப்படுவதாகவும் தமிழக அரசு குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.