அரச குடும்ப வாரிசை வரவேற்க காத்திருக்கும், தங்க தொட்டிலும், காஷ்மீர் கம்பளிப் போர்வைகளும்!
In இங்கிலாந்து April 2, 2019 9:25 am GMT 0 Comments 2685 by : adminsrilanka
அரச குடும்பத்தின் புதிய வாரிசை வரவேற்கும் முகமாக உயர்தரத்திற்கும், பெறுமதிக்கும் குறைவில்லாமல் பல ஆடை, அணிகலன்கள், தொட்டில்கள் மற்றும் குழந்தைக்குப் பாதுகாப்பான தள்ளும் சக்கரவண்டிகள் என்பன இப்போதே தயார்படுத்தப்பட்டுவிட்டன.
$112,000 பெறுமதியான வைர மற்றும் தங்கத்திலான மாதிரி வடிவங்களைக் கொண்ட பொருட்களும், $1,320 பெறுமதியான காற்சட்டைகள் மற்றும் மேலாடைகள் என்பனவும் இதில் உள்ளடங்குகின்றன.
முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு பிரித்தானிய இளவரசர் ஹரி மற்றும் அவரது அமெரிக்க மனைவியான மேகன் ஆகியோரின் முதல் குழந்தைக்காக இந்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதேபோன்று, குழந்தைக்கான தரமான விளையாட்டு பொருட்களுக்கும் எந்தவித பற்றாக்குறையும் இல்லை என அதன் ஏற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.
தனிப்பயனாக்கப்பட்ட விளையாட்டு வீடுகள், காஷ்மீர் கம்பளி மேலங்கிகள், பாரம்பரிய ரொக்கிங் குதிரைகள் என்பனவும் சொகுசு விளையாட்டு உபகரணங்களில் உள்ளடங்குகின்றன.
வசதியான பெற்றோரின் தேவைகளை நிறைவேற்ற முற்படும் தரஅடையாளங்களுடன் விலை உயர்ந்த பொருட்களுக்கான பட்டியலை பிரித்தானிய அரச குடும்ப அதிகாரிகள் தயாரித்துள்ளனர்.
“அவர்களின் குழந்தைக்காக என்று வரும்போது எந்தவொரு பொருளுக்கும் பணம் செலுத்துவதற்கு தயாராக இருக்க வேண்டும், அத்துடன் அவர்கள் இந்த பொருட்களை அவசியம் என்று கருதுகின்றனர்” என லண்டனில் வௌியாகும் தி பேபி சஞ்சிகையின் ஆசிரியர் கேட் பிரூட் தெரிவித்தார்.
கடந்த ஜனவரி மாதமே தனது கர்ப்ப காலத்திற்கு ஆறுமாத காலம் கழிந்து விட்டதாக தெரிவித்துள்ள மேகன், பிறக்கப் போகும் குழந்தையின் பாலினம் பற்றி அறிவிக்கவில்லை.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.