அருணாசல பிரதேத்தில் அடுத்தடுத்து நிலநடுக்கம்
In இந்தியா April 24, 2019 2:56 am GMT 0 Comments 2026 by : Dhackshala

வடகிழக்கு மாநிலமான அருணாசல பிரதேத்திலும், நேபாளத்திலும் அடுத்தடுத்து நிலஅதிர்வுகள் உணரப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அருணாச்சல பிரதேசத்தில் இன்று (புதன்கிழமை) அதிகாலை 1.45 மணிக்கு இவ்வாறு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
சியாங்குக்கு மேற்கு பகுதியில் உணரப்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.8ஆக பதிவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
திப்ருகார்க் மாவட்டத்திற்கு வடமேற்கில் 114 கி.மீ. தூரத்தில் திபெத் எல்லைக்கு அருகே 40 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இதுகுறித்த சேதங்கள் பற்றிய முதற்கட்ட தகவல் ஏதும் வெளியிடப்படவில்லை. இந்த நிலநடுக்கம் திபெத்திலும் உணரப்பட்டதாக சீனா தெரிவித்துள்ளது.
அதேபோல் நேபாளம் தலைநகர் காத்மாண்டுவில் இன்று காலை 6.14 மணிக்கு ரிக்டர் அளவுகோலில் 4.8 என்ற அளவில் நிலஅதிர்வு உணரப்பட்டுள்ளது.
தொடர்ந்து நேபாளத்தின் தாடிங் மாவட்டத்தில் உள்ள நவுபிஸில் காலை 6.29, 6.40 மணிக்கு அடுத்தடுத்து இரு நிலநடுக்கங்கள் உணரப்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 5.2 மற்றும் 4.3 என பதிவான இந்த நிலநடுக்கத்தால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
தமிழக மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர்கள் சமாசம் வடக்கு தழுவிய கதவட
-
விவசாய சங்கங்கள் மற்றும் மத்திய அரசுக்கு இடையிலான 11ஆவது கட்டப் பேச்சுவார்த்தை எந்த முடிவும் எடுக்கப
-
நாட்டில் மேலும் 346 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிர
-
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், முதல்நாள் ஆட்டம் நிறைவுக்க
-
ரஷ்ய கொரோனா வைரஸ் தடுப்பூசியான ‘ஸ்பூட்னிக் வி’க்கு ஹங்கேரி ஒப்புதல் அளித்துள்ளது. இதன்மூ
-
உலக சுகாதார அமைப்புடன் மீண்டும் இணையும் அமெரிக்காவின் முடிவை ஐக்கிய நாடுகள் சபை வரவேற்றுள்ளது. இதுகு
-
தமிழில் தேசிய கீதத்தை இம்முறையேனும் இசைத்து இன நல்லிணக்கத்திற்கான நம்பகத்தன்மையை வெளிப்படுத்த வேண்டு
-
கொவிட்-19 தொற்றுநோய் மற்றும் பொருளாதாரத்தை மீட்பது போன்ற சவால்களைச் சமாளிக்க, புதிய அமெரிக்க நிர்வாக
-
தொற்றுநோயின் தாக்கம் காரணமாக, பிரிட்டிஷ் சில்லறை விற்பனை கடந்த ஆண்டு வரலாற்றில் மிகப் பெரிய வருடாந்த
-
மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், பங்களாதேஷ் அணி 7 விக்கெட்டுகளால் சிறப