ஆர்ஜென்டினாவில் கருக்கலைப்பு சட்ட மூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்
In உலகம் November 29, 2020 3:00 am GMT 0 Comments 1405 by : Dhackshala

ஆர்ஜென்டினாவில் கருக்கலைப்பு சட்ட மூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Buenos Airesஇல் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் அரசுக்கு எதிராக கண்டனம் தெரிவித்து முழக்கமிட்டனர்.
அத்தோடு, அரசை கண்டிக்கும் வகையில் வாசகங்கள் அடங்கிய பதாகைகள் மற்றும் குழந்தை வடிவ பொம்மை ஒன்றையும் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ஜென்டினாவில் கருக்கலைப்பு செய்யும் சட்ட மூலத்திற்கு ஒப்புதல் அளிக்கக் கூடாது என்றும் இதனை திரும்பப் பெற வலியுறுத்தியுமே நாட்டில் உள்ள பெரும்பான்மையான கத்தோலிக்க மக்கள் இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.