அல்ஜீரியாவில் அரசியல் மாற்றத்தை வலியுறுத்தி பிரான்சில் போராட்டம்
அல்ஜீரிய ஜனாதிபதியின் பதவி விலகலை வலியுறுத்தியும், நாட்டில் அரசியல் மாற்றத்தை கோரியும் பிரான்சில் பாரிய போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பிரான்சில் வசிக்கும் அல்ஜீரிய பிரஜைகளினால் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இப்போராட்டம் நடத்தப்பட்டிருந்தது. இப்போராட்டத்தில் சுமார் 2 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கலந்துக் கொண்டனர்.
அல்ஜீரியாவிலுள்ள தமது சொந்தங்களுக்கு ஆதரவை வெளிகாட்டும் வகையில் வாரந்தோறும் போராடவுள்ளதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
அல்ஜீரிய ஜனாதிபதி அப்தெலசிசின் பதவி விலகலை வலியுறுத்தி, அல்ஜீரிய மக்கள் கடந்த ஆறு மாதங்களாக போராடி வருகின்றனர்.
இந்நிலையில், அல்ஜீரிய ஜனாதிபதியை நாட்டின் தலைமைக்கு தகுதியற்றவர் என பிரகடனப்படுத்துமாறு அரசியலமைப்பு சபையை வலியுறுத்தி அல்ஜீரிய இராணுவமும் ஆர்ப்பாட்டத்தில் குதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
நாட்டில் கொரோனா தொற்று உறுதியான மேலும் ஒரு மரணம் பதிவாகியுள்ள நிலையில் இதுவரை தொற்றினால் உயிரிழந்தவர
-
தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதும் மக்களுக்கு அதனை இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்க
-
போராட்டத்தில் வன்முறை சூழுமானால், அரசின் திசைதிருப்பும் அரசியலுக்கு உதவியாக அமைந்துவிடும் என்பதை விவ
-
இலங்கையின் 73 ஆவது சுதந்திர தினத்தை கரிநாளாக அனுஷ்டிக்க முன்வருமாறு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களி
-
மேல் மாகாணத்தை விட்டு வெளியேறுவோருக்கு எழுமாறாக பரிசோதனை முன்னெடுக்கப்படும் பொலிஸார் ஊடகப்பேச்சாளர்
-
நாட்டில் மேலும் 369 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு
-
பாகிஸ்தான் மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின், முதல்நாள் ஆட்டம் நிற
-
ரஷ்யாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 70ஆயிரத்தைக் க
-
வேளாண் சட்டங்களுக்கு எதிராக ட்ராக்டர் பேரணியை முன்னெடுத்துள்ள விவசாயிகள் மீது பொலிஸார் கண்ணீர்புகைக்
-
நடிகர், நடிகைகள் உள்ளிட்ட பலரது வாழ்க்கையை ஓ.டி.டி. தளங்கள் காப்பாற்றும் என நடிகை வித்யா பாலன் தெரிவ