அல்ஜீரிய ஜனாதிபதியின் தசாப்தகால ஆட்சிக்கு முற்றுப்புள்ளி!
பல்வேறு அழுத்தங்களுக்கு மத்தியில் அல்ஜீரிய ஜனாதிபதியின் இரண்டு தசாப்தகால ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
அதன்படி நீண்டகாலமாக நோய்வாய்ப்பட்டிருந்த ஜனாதிபதி அப்தெலசீஸ் போடேலிபிகா தனது பதவியை நேற்று (செவ்வாய்க்கிழமை) இராஜினாமா செய்துள்ளார்.
அப்தெலசீஸ் தனது இராஜினாமா கடிதத்தினை அரசியலமைப்பு சபையின் தலைவரிடம் ஒப்படைத்துள்ளார்.
மீண்டும் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்று புதிய ஜனாதிபதி தெரிவுசெய்யப்படும் வரை 90 நாட்களுக்கு நாடாளுமன்ற தலைவரின் ஆட்சி நிலவவுள்ளது.
பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டிருந்த 82 வயதான அப்தெலசீஸின் இராஜினாமாவை அடுத்து நீடித்துவந்த போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் பதவி விலகலை வலியுறுத்தி இளைஞர்களும், பலம்மிகுந்த இராணுவத்தினரும் போராட்டங்களில் ஈடுபட்டுவந்தனர்.
ஜனாதிபதி அப்தெலசீஸின் தலைமை இனியும் நாட்டிற்கு பொருத்தமற்றது என பிரகடனப்படுத்துமாறு போராட்டக்காரர்கள் கோரி வந்தனர். கடந்த ஆறு வாரங்களாக முன்னெடுக்கப்பட்ட அமைதி போராட்டங்களின் எதிரொலியாக அவரது பதவி விலகல் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
கொரோனா வைரஸினைக் கட்டுப்படுத்துவதற்கு ஏனைய நாடுகள் பின்பற்றிய தந்திரோபாய அணுகுமுறையை இலங்கை பின்பற்ற
-
மட்டக்களப்பு, வாழைச்சேனை பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக மூவாயிரத்து எண்ணூறு ஏக்கருக்கும் மேற்
-
வவுனியா- கூமாங்குளம் பகுதியிலுள்ள வீடொன்றில் தற்கொலை செய்துகொண்ட இளம் குடும்ப பெண்ணின் சடலம், பொலிஸ
-
இலங்கையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் வசிப்போரின் மின் கட்டணத்தை செலுத்துவதற்கு 06 மாத கால ச
-
அயல்நாடுகளுக்கு முன்னுரிமை என்ற தனது கொள்கைக்கு தொடர்ந்தும் முக்கியத்துவம் வழங்கப்படும் என இந்திய பி
-
வேளாண் சட்டங்கள் குறித்து மத்திய அரசுக்கும், விவசாய சங்க பிரதிநிதிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை
-
வங்கி மோசடி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள தொழில் அதிபர் விஜய் மல்லையா பிரித்தானியாவில் தஞ்சம் அடைந
-
முல்லைத்தீவு- குமுளமுனை தண்ணிமுறிப்பு குருந்தூர் மலையில் தமிழ் மக்கள் வழிபட்டுவந்த கிராமிய ஆதி ஐயனார
-
வவுனியா தரணிக்குளம் பகுதியில் தலையில் காயங்களுடன் மூன்று பிள்ளைகளின் தந்தை சடலமாக கண்டெடுக்கப்பட்டுள
-
வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை இன்றும் (செவ்வாய்க்கி