இயற்கையான முறைகளில் தயாரித்த பொருட்களை பயன்படுத்திய மனிதன் அன்று ஆரோக்கியமாக வாழ்ந்தான்.
நவீன காலத்தில் நவீன உற்பத்திப் பொருட்களின்பால் ஈர்க்கப்பட்ட மனிதன், அதன்பின்னால் ஓடும் நிலை ஏற்பட்டுவிட்டது. குறிப்பாக களிமண்ணால் தயாரிக்கப்படும் மட்பாண்டங்களின் இன்றைய நிலை தொடர்பாக ஆதவனின் அவதானம் கவனஞ்செலுத்துகின்றது.
வவுனியா மாவட்டத்தில் மட்பாண்ட கைத்தொழில் அழிவை நோக்கி செல்வதாக உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் வாழ்வில் மனிதனும் நவீன முறைகளை கையாள்கின்றான். ஆனால், அதனால் ஏற்படும் விளைவுகளை விலைகொடுத்து வாங்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றோம்.
மட்பாண்ட கொள்வனவில் மக்கள் அக்கறை செலுத்தாத காரணத்தால், விற்பனையும் குறைந்துள்ளது. இவ்வாறு செல்வதால் இத்தொழில்முயற்சி கைவிடப்படலாமென மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.