அவுஸ்ரேலிய அணியில் இருந்து பட்டின்சன் விலகல்!

இந்தியாவுக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட் போட்டிக்கான அவுஸ்ரேலிய அணியிலிருந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் பட்டின்சன் காயம் காரணமாக விலகியுள்ளார்.
வீட்டில் விழுந்ததில் விலா பகுதியில் ஏற்பட்ட காயத்தால் 3-வது டெஸ்ட் போட்டிக்கான அணியில் பட்டின்சன் இடம் பெறமாட்டார் என அவுஸ்ரேலிய கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டிக்கு முன்பு அவர் முழு உடல் தகுதியை எட்டினால் கடைசி டெஸ்டுக்கான அணியில் சேர்க்கப்படுவார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் பட்டின்சனுக்கு பதிலாக மாற்று வீரர் எவரும் அணியில் இணைத்துக் கொள்ளப்படவில்லை.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.