அஷ்வினின் அதிரடி சதம் : இங்கிலாந்து அணிக்கு 482 ஓட்டங்கள் வெற்றி இலக்கு
In கிாிக்கட் February 15, 2021 10:18 am GMT 0 Comments 1451 by : Jeyachandran Vithushan

அஷ்வினின் சிறப்பான துடுப்பாட்டத்தில் உதவியுடன் இந்தியா அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 286 ஓட்டங்களை பெற்றுக்கொண்டுள்ளது.
இதனை அடுத்து இங்கிலாந்து அணிக்கு 482 என்ற வெற்றி இலக்கினை இந்தியா அணி நிர்ணயித்துள்ளது.
இந்தியா அணி சார்பாக அஷ்வின் சிறப்பாக துடுப்பெடுத்தாடி 106 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க அணியின் தலைவர் விராட் கோலி 62 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
பந்துவீச்சில் இங்கிலாந்து அணி சார்பாக ஜாக் லீச் மற்றும் மொயீன் அலி ஆகியோர் தலா இரண்டு விட்க்களை வீழ்த்த ஒலி ஸ்டோன் ஒரு விக்கெட்டினை கைப்பற்றினார்.
இந்நிலையில் 482 என்ற வெற்றி இலக்கினை நோக்கி இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடவுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.