அஷ்வினின் சூழலில் சிக்கி 134 ஓட்டங்களுக்குள் சுருண்டது இங்கிலாந்து !
In கிாிக்கட் February 14, 2021 9:46 am GMT 0 Comments 1321 by : Jeyachandran Vithushan

இந்தியாவிற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதலாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 134 ஓட்டங்களுக்குள் சுருண்டுள்ளது.
இரண்டாவது ஆட்டம் இன்று ஆர்மபிமான நிலையில் இங்கிலாந்து அணி 59.5 ஓவர்களை எதிர்கொண்டு 134 மட்டுமே பெற்று 195 ஓட்டங்கள் பின்னிலையில் உள்ளது.
அவ்வணி சார்பாக பென் போக்ஸ் ஆட்டமிழக்காமல் 42 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க பந்துவீச்சில் இந்திய அணி சார்பாக அஷ்வின் 5 விக்கெட்களை கைப்பற்றினார்.
இந்நிலையில் 195 ஓட்டங்கள் முன்னிலையுடன் இந்தியா அணி தனது இரண்டாவது இன்னிங்ஸிற்காக மீண்டும் துடுப்பெடுத்தாடவுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.