அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தை கூட்டுவது குறித்து ஆலோசனை
In இந்தியா December 20, 2020 5:42 am GMT 0 Comments 1387 by : Dhackshala

அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தை கூட்டுவது குறித்து சென்னையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.
தமிழக சட்டசபைக்கு தேர்தல் நடைபெற இன்னும் 4 மாதங்களே உள்ளதால் எல்லா கட்சிகளும் தயாராகி வருகின்றன.
அ.தி.மு.க. முதலமைச்சர் வேட்பாளரான எடப்பாடி பழனிசாமி நேற்று சேலம் மாவட்டம் எடப்பாடியில் தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ளார்.
இந்த நிலையில் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தை கூட்டுவது குறித்து சென்னையில் இன்று மாலை ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது.
அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 6.30 மணிக்கு எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் தலைமையில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் மூத்த நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்.
இந்த கூட்டத்திற்கு பிறகு அ.தி.மு.க. பொதுக்குழு கூடும் திகதி குறித்து அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.